உள்ளூர் செய்திகள்

குன்னத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்.

Published On 2022-06-17 08:21 GMT   |   Update On 2022-06-17 08:21 GMT
  • முகாமில் முதியோர் உதவித்தொகை காது மற்றும் வாய் பேசஇயலா–தவர்களுக்கு செல்போன் வழங்கபட்டது.
  • வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் என சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கை–யற்கண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழ–ங்கப்பட்டது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வ.கீரனூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

இதில் முதியோர் உதவித்தொகை காது மற்றும் வாய் பேசஇயலாதவர்களுக்கு செல்போன் வழங்கபட்டது.

வேளாண்மைத் துறை மூலம் மருந்து தெளிப்பான் இயந்திரம் வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் என சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மேலும் இந்த முகாமில் குன்னம் வட்டாட்சியர் அனிதா, சமூக நல தாசில்தார் சின்னத்துரை, வேப்பூர் ஒன்றிய துணை தலைவர் செல்வராணி வரதராஜன்,

வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், மனோகரன், தீரன் சின்னமலை, சேஷாத்திரி, ராஜேஷ் கண்ணா, ராஜேஷ்வரி வளர்மன்னன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News