உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு முகாம்

Published On 2023-04-28 06:11 GMT   |   Update On 2023-04-28 06:11 GMT
  • பெரம்பலூரில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது
  • முகாமிற்கு எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேல் மற்றும் காவல் அதிகாரிகள் பொதும க்களிடம் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். இதில் 25 மனுக்கள் பெற்றப்பட்டு உடனடியாக 5 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

பின்னர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி கூறுகையில், பொது மக்களின் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கு ம்பொருட்டு வாரந்தோறும் புதன் கிழமைகளில் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி முகாமில் கலந்துகொண்டு மனு அளிக்கலாம். மேலும் பொது மக்கள் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முகாமினை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.


Tags:    

Similar News