உள்ளூர் செய்திகள் (District)

தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்

Published On 2023-04-11 07:12 GMT   |   Update On 2023-04-11 07:35 GMT
  • பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது
  • பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடந்தது. முகாமினை மாவட்ட திறன்மிகு இந்தியா பயிற்சி மைய உதவி இயக்குநர் செல்வம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-பிரதம மந்திரி தொழிற் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் மாதாந்திர உதவி தொகையுடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் மாதம் 2 நாட்களில் (திங்கட்கிழமைகளில்) நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற்று பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவர்கள், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், மகளிர் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சியை இலவசமாக பெற்று பயபெறலாம் என தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த பல முன்னணி சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலார்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்தனர்.தொழில்பழகுநர் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டோருக்கு சேர்க்கை ஆணை தொழில் நிறுவனங்களால் வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை தொழில் நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது.

Tags:    

Similar News