உள்ளூர் செய்திகள் (District)

டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-11-09 08:14 GMT   |   Update On 2023-11-09 08:14 GMT
பெரம்பலூரில்டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் 

பெரம்பலூரில் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் டெங்கு, மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். மணிவண்ணன் தலைமை வகித்தார்.

மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) கலாராணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் (மேல்நிலை) சுரேஷ், இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட கவுரவ செயலாளர் ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து பேரணியினை தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார். இந்த பேரணி மாவட்ட தலைமை மருத்துவமனை, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராசர் வளைவு, சங்கு பேட்டை, கடைவீதி வழியாக வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் கவுன்சிலர்கள் மற்றும் ஜூனியர்கள் கோஷமிட்டும், பதாகைகள் ஏந்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மேல்நிலை, உயர்நிலை,மெட்ரிக், நடுநிலை ஆகிய 38 பள்ளிகளில் இருந்து 497 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணை கன்வீனர் துரை, வேப்பூர் மாவட்ட பொருளாளர் ராஜா, மண்டல அலுவலர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஜே.ஆர்.சி. மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட கன்வீனர் ஜோதிவேல் நன்றி கூறினார். 

Tags:    

Similar News