உள்ளூர் செய்திகள்
ஆதரவற்ற விதவை சான்றிதழ் கோரி கலெக்டரிடம் பெண் மனு
- கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
- விண்ணபித்து பல மாதங்களாகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மனு கொடுக்க வந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கடமடை கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி சாலம்மாள். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் சாலம்மாளின் கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
இந்நிலையில் சாலம்மாளுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதரவற்ற விதவை சான்றிழ் தேவை என்று விண்ணபித்தார். விண்ணபித்து பல மாதங்களாகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனவே ஆதரவற்ற விதவை சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.