உள்ளூர் செய்திகள்

சேரும் சகதியமான தெருக்களில் நாற்று நடும் போராட்டம்

Published On 2024-07-19 09:30 GMT   |   Update On 2024-07-19 09:30 GMT
  • குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.
  • சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் ஊராட்சியில் 7-வது வார்டு குறுக்கு தெரு, நடுத்தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த ஒரு மாத காலமாக மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன.

இதனால் இங்கு வசிக்கக்கூடிய ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் சாக்கடை நீரில் நடக்கும்போது நோய் பரவுகின்றது.

சேரும் சகதியமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சேரும் சகதியமாக உள்ள இந்த தெருவில் நெல் நாற்றுகளை நட்டு போராட்டம் நடத்தினர். இந்த சாலையை சீரமைக்கவிட்டால் அதிகாரிகளை கண்டித்து அடுத்த கட்டமாக மீன் பிடிக்கும் போராட்டம், நீச்சல் அடிக்கும் போராட்டம் போன்ற போராட்டங்கள் நடத்தப்போவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News