உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 வகுப்புகள் இன்று தொடங்கியது: 2 நாட்களுக்கு புத்துணர்வு பயிற்சி

Published On 2022-06-20 08:35 GMT   |   Update On 2022-06-20 08:35 GMT
  • 19 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வகுப்புகள் திறக்கப்பட்டதால் பிளஸ்-2 மாணவர்கள் மிகவும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர்.
  • இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 சேரும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 27-ந்தேதி வகுப்புகள் தொடங்கும்.

சென்னை:

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2021-2022) பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பிளஸ்-1 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதற்கிடையே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்ப பள்ளி வளாகங்களில் அனைத்துவித முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

19 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வகுப்புகள் திறக்கப்பட்டதால் பிளஸ்-2 மாணவர்கள் மிகவும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்றும் நாளையும் வழக்கமான பாடங்கள் நடத்தக்கூடாது.

அதற்கு பதிலாக அவர்களுக்கு 2 நாட்களுக்கு புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மாணவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 சேரும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 27-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News