உள்ளூர் செய்திகள்

கடலூரில் இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

கடலூரில் இணையவழி குற்றங்கள் தடுப்பது குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2023-05-07 07:29 GMT   |   Update On 2023-05-07 07:29 GMT
  • போலீசார் துண்டுப்பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் புகைப்படம் பதிவிடக்கூடாது,

கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை யின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு மேற்பார்வையில் இணையவழி குற்றபிரிவு போலீஸ் இனங கவிதா மற்றும் போலீசார் கடலுார் வெள்ளி கடற்கரையில் பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பாக துண்டுப்பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுச்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க் யை ஓபன் செய்ய கூடாது, வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் புகைப்படம் பதிவிடக்கூடாது, போலியான செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டாம் ஆகிய இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 ம ற்றும் இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News