உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவர்


ஆர்.கே.காளிதாசன் பரிசு வழங்கிய காட்சி.


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பாவூர்சத்திரத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்- பரிசளிப்பு விழா

Published On 2023-01-19 09:02 GMT   |   Update On 2023-01-19 09:02 GMT
  • பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தென்காசி:

பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

விழாவிற்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவரும், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சங்க தலைவரும், வணிகர் சங்க மாவட்ட தலைவருமான ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

விழாவில் கே.என்.எஸ். குழுமம் நாராயண சிங்கம், சேவியர் டிம்பர்ஸ் உரிமையாளர் சேவியர் ராஜன், எஸ். பி.கே.டிரேடர்ஸ் கண்ணன் ஆகியோரும், குலசேகரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மதி ெசல்வன், அருணோதயம், வெள்ளப்பாண்டியன், சந்தை மட்டன் ஹோட்டல் லிங்கதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி வரவேற்புரை ஆற்றினார்.

விழாவிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, மன்ற செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர் ஈஸ்வர பாண்டியன், துணைச்செயலாளர் பால் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கபாடி குழு, சிவந்தி ஆதித்தனார் கால்பந்து கழகம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் காமராஜ் நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News