தருமபுரியில் மின் கம்பம் உடைந்ததால் 5 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
- கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த சூறை காற்றுடன் கன மழை பெய்து வந்தது.
- மரத்தின் மரக்கிளை உடைந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் இரண்டாக உடைந்து குடியிருப்புக்கு செல்லும் சாலையின் குறுக்கே சாய்ந்தது.
தருமபுரி,
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன டிப்படையில் தருமபுரி மாவட்டத்திலும் கடந்த 5 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த சூறை காற்றுடன் கன மழை பெய்து வந்தது.
இதனையடுத்து நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் தருமபுரி அடுத்த தொழில் மைய குடியிருப்பு பகுதியில் இருந்த பழமையான மரத்தின் மரக்கிளை உடைந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்கம்பம் இரண்டாக உடைந்து குடியிருப்புக்கு செல்லும் சாலையின் குறுக்கே சாய்ந்தது.
இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். உடனடியாக குடியிருப்பு பகுதிக்கு மின்சாரம் துண்டிக்கபட்டது.
தகவலறிந்து வந்த மின்சார துறையினர் மரக்கிளை மற்றும் மின்கம்பத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு சரி செய்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்