சித்தா மருத்துவ கல்லூரியில் 2-வது நாளாக பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
- நெல்லை அரசு சித்த மருத்துவகல்லூரி பழமை வாய்ந்தது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- இங்கு 4½ ஆண்டுகள் படிப்புக்கு பிறகு மாணவர்கள் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அரசு சித்த மருத்துவகல்லூரி பழமை வாய்ந்தது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 4½ ஆண்டுகள் படிப்புக்கு பிறகு மாணவர்கள் ஓராண்டு பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அரசின் சார்பில் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே பயிற்சி டாக்டர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊக்கத் தொகை வழங்கப் படவில்லை என தெரிகிறது.
இதைத்தொடர்ந்து உடனடியாக ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி டாக்டர்கள் நேற்று கல்லூரி முதல்வர் அறையின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.