உள்ளூர் செய்திகள்

சாகுபுரம் டி.சி.டபுள்யூ. நிறுவனத்தின் சார்பில் நடந்த பாதுகாப்பு வார விழாவில் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையில் பாதுகாப்பு வாரவிழா - போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

Published On 2023-03-07 08:31 GMT   |   Update On 2023-03-07 08:31 GMT
  • பாதுகாப்பு வார விழாவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உறுதி மொழியினை ஏற்றனர்.
  • வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிவக்குமார் தெரிவித்தார்.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில் 52- வது பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

இதனை நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பாதுகாப்பு உறுதி மொழியினை ஏற்றனர்.

தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி, கோலப்போட்டி மற்றும் தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தி விபத்தினை தடுப்பது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் தலைமை தாங்கினார். மனித வளம் மற்றும் சட்டப்பிரிவு மேலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தீங்கு அற்ற பணியிடமே எங்களது குறிக்கோள் என்ற கருப்பொருளை மையமாக வைத்து தொழிற்சாலை இயங்க வேண்டும். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தவறான வதந்திகள் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். பாதுகாப்பு நடவடிக்கையில் டி.சி.டபிள்யூ. அன்றாடம் பின்பற்றி வரும் நடைமுறை செயல்களை விளக்கி நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் பேசினார்.

விழாவிற்கான ஏற்பாடு களை நிறுவனத்தின் பாதுகாப்பு துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News