உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களை படத்தில் காணலாம்.

பண்ருட்டி-சென்னை சாலையில் ெரயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-05-19 08:31 GMT   |   Update On 2023-05-19 08:31 GMT
  • பண்ருட்டி-சென்னை சாலையில் ெரயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கடலூர்:

பண்ருட்டியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சாலையில் உள்ள ரயில்வே கேட் மற்றும் கேட் லாட்சை நிரந்தரமாக மூடரயில்வே நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து இன்று காலை பராமரிப்பு பணியினால் தற்காலிகமாக ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே கேட்டை மூடினார். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பாதசாரதிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News