உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 212 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2023-01-08 07:08 GMT   |   Update On 2023-01-08 07:08 GMT
  • புதுக்கோட்டையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 212 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டது
  • தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதியான கைகாட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்

ஆலங்குடி:

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எல்லைப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்று வருவதாக, புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தஞ்சை மாவட்டப் போலீசார் தகவல் கொடுத்திருந்தனர். இதன் தொடர்ந்து, புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதியான கைகாட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆலங்குடி அருகே உள்ள கைகாட்டி அண்ணா நகர் புதுத்தெரு பகுதியில் கார் ஒன்றை நிறுத்தி, பூட்டி விட்டு ஓடுவது சந்தேகமாக இருபதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தகவல் அளித்த இடத்திற்கு சென்ற மாவட்ட மதுவிலக்கு மற்றும் போதைத் தடுப்பு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் ஆலங்குடி மது விலக்கு இன்ஸ்மபெக்டர், மணமல்லி , சப்-இன்ஸ்கபெக்டர் கவிதா உள்ளிட்ட போலீசார் அந்த காரை சோதனையிட்ட போது, ஏழு மூட்டைகளாக கட்டப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான, 212 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது

. காருடன் அதனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்து இதனை அனுப்பியவர் யார்? புதுக்கோட்டையில் யார் யாருக்கு சப்ளை? செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News