உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் கள்ளச்சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-23 08:41 GMT   |   Update On 2022-06-23 08:41 GMT
  • ஆலங்குடியில் கல்லச்சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
  • கள்ளச்சாரயத்தை ஒழிப்போம் என்ற வாசகத்துடன், கள்ளச்சாராயம் காய்ச்சி குடிப்பது பெரு அவமானம் என பேனர்கள் கையில் ஏந்தியபடிக்பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு ஆணைக்கிணங்க கள்ளசாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. பேரணிக்கு ஆலங்குடி தாசில்ல்தார் செந்தில்நாயகி தலைமை வகித்தார்.

விழிப்புணர்வு பேரணி தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி அரசமரம்,வடகாடுமுக்கம், காமராஜர்சிலை, பழைய நீதிமன்ற வளாகம் ஆகிய வழியாக மீண்டும் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது.

புதுக்கோட்டை கலால் தனி வட்டாட்சியர் கண்ணாகருப்பையா ஆலங்குடி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் ஆலங்குடி தாசில்தார் பஸ் ஸ்டாண்டில் நின்ற பேருந்துகளிடம் ஏறி கள்ளச்சாரயத்திற்கு எதிரான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

கள்ளச்சாராயத்துக்கு எதிரான தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழக்கத்தோடு ஒழிப்போம் ஒழிப்போம் கள்ளச்சாரயத்தை ஒழிப்போம் என்ற வாசகத்துடன், கள்ளச்சாராயம் காய்ச்சி குடிப்பது பெரு அவமானம் என பேனர்கள் கையில் ஏந்தியபடிக்பேரணி நடைபெற்றது.

பேரணியில் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News