மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி மாணவிகளுக்கு மாத்திரைகளை கொடுத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு வரும் 24-ந் தேதி வழங்கப்பட உள்ளது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி.) மற்றும் 2 முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), டாக்டர் நமச்சிவாயம் (அறந்தாங்கி), தலைமையாசிரியர் சுசரிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.