முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- 3 நாட்கள் யாகசாலை நடைபெற்ற பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் தாலுகா பில்லுவலசை கிராமத்தில் முத்துமாரியம்மன் ேகாவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததையொட்டி கும்பாகிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. விழா தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித ர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சார்யார்கள் புனித நீரினை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து ராமானுஜம் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை கலந்து கொள்வதற்காக பில்லுவலசை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். கும்பாகிஷேகத்திற்கு பின்னர் அவர்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.