உள்ளூர் செய்திகள் (District)

முக்கரை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2023-02-11 09:24 GMT   |   Update On 2023-02-11 09:24 GMT
  • முக்கரை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
  • காசி இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

ஆலங்குடி:

புதுக்கோட்டை அருகே உள்ள கட்சிரான்பட்டி கிராமத்தில் உள்ள முக்கரை விநாயகர் பூரண புஷ்கலாம்பிகா சமேத அய்யனார், ஆகாச கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதிதாக ஆலயங்கள் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் யாகசாலை பூஜை நடைபெற்றது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை, லட்சுமி பூ ஜை, கோபூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காசி இராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசத்தில் நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவினை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

Tags:    

Similar News