உள்ளூர் செய்திகள் (District)

மேம்பாலம் அமைக்க ெரயில்வே அனுமதி

Published On 2023-03-11 07:09 GMT   |   Update On 2023-03-11 07:09 GMT
  • புதுக்கோட்டை அருகே கருவேப்பிலான் கேட் பகுதியில் ேமம்பாலம் அமைய உள்ளது
  • புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. தகவல்

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்பியுமான சு. திருநாவுக்கரசா். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலை சிபிஐ அதிகாரி போலவும், அமலாக்கத் துறை அதிகாரி போலவும் பேசுகிறாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், அந்த ஆட்சியை அச்சுறுத்தும் வகையில் அண்ணாமலை பேசுகிறாா். கைது செய்ய வேண்டிய சட்டப்பிரிவுகளில்தான் கைது செய்வாா்கள். கைது செய்து பாா் என அவா் சவால் விடுக்கிறாா்.ராகுல்காந்தியின் நடைப்பயணம் சட்டப்பேரவைத் தோ்தல்களில் எதிரொலிக்கவில்லையே எனக் கேட்கிறாா்கள். அந்தப் பயணம் நாடாளுமன்றத் தோ்தலுக்காக நடத்தப்பட்டது. சட்டப்பேரவைத் தோ்தலில் வேறு பல அரசியல் அம்சங்கள் இருக்கும். வெயில், மழை கடந்து நடந்திருக்கிறாா். எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு விமா்சிக்கக் கூடாது.மதுரை மற்றும் திருச்சி ெரயில்வே கோட்டங்களில் ெரயில் சேவை குறித்த கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. புதுக்கோட்டையை பொறுத்தவரை புதுக்கோட்டை- தஞ்சை புதிய தடம் அமைக்க நில அளவை குறித்தும், கீரனூரில் ெரயில்கள் நிறுத்தம் குறித்தும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதிய ெரயில் தடம் அமைப்பது குறித்தும், புதுக்கோட்டை நகரில் கருவேப்பிலான் கேட் மற்றும் திருவப்பூா் கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டது.இவற்றில் கருவேப்பிலான் கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க ெரயில்வே துறை அனுமதித்துள்ளது. திருவப்பூா் மேம்பாலம் அமைப்பதில், எத்தனை வண்டிகள் கடந்து செல்கின்றன என்பன குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். இதையும் மேற்கொள்ளக் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News