உள்ளூர் செய்திகள் (District)

மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்... விஜய் வசந்த்

Published On 2024-09-21 07:55 GMT   |   Update On 2024-09-21 07:55 GMT
  • சுரங்கம் தொடர்பாக அக்டோபர் 1-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
  • மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கிள்ளியூர் பகுதியில் ௫ கிராமங்களை உள்ளடக்கிய 1,144 ஹெக்டேர் பரப்பில் IREL நிறுவனம் அணுக்கனிம சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதனிடையே சுரங்கம் தொடர்பாக அக்டோபர் 1-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், எந்த வளர்ச்சி திட்டமும் கொண்டு வரும் முன்னர் மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். அது போன்று மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் IREL நிர்வாகத்தையும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

Similar News