- பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன
- திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள கோவில்களை சீரமைக்கவும், வேலி அமைக்குமாறும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில், கீரனூர் உத்தமநாதர் சுவாமி கோவிலில் சிதிலம் அடைந்திருந்த அனைத்துப் பகுதிகளும் ரூ.8.98 லட்சத்தில் புனரமைக்ககும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இரும்பநாடு சவுந்தராஜ பெருமாள் கோவில் ரூ.23.98 லட்சத்திலும், வாராப்பூர் சிவன் கோவில் ரூ.24.95 லட்சத்திலும், குடுமியான்மலை சிக்கந்தர் சுவாமி கோவில் ரூ.24.89 லட்சத்திலும், அங்குள்ள குளம் ரூ.24.3 லட்சத்திலும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் லட்சுமணப்பட்டியில் உள்ள சமணர் கோவில் ரூ.12.33 லட்சத்திலும், ஆலங்குடிப்பட்டி தீர்த்தங்கரர் சிலையை சுற்றிலும் ரூ.5.16 லட்சத்தில் வேலி அமைக்கு பணியும் நடைபெற்று வ ருகின்றன. கடந்த நிதி ஆண்டில் மாவட்டத்தில் ரூ.1.22 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.