உள்ளூர் செய்திகள்

சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம்

Published On 2022-11-14 07:07 GMT   |   Update On 2022-11-14 07:07 GMT
  • சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது
  • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தகவல்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் தாட்கோ மூலம் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது.

மேலும், இது தொடர்பான விவரங்களை மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, காட்டு புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை என்ற முகவரியில் அல்லது தாட்கோ, மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 04322 - 221487 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News