உள்ளூர் செய்திகள்

கல்வி, விளையாட்டில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும்- அமைச்சர்கள் அறிவுரை

Published On 2022-08-23 08:11 GMT   |   Update On 2022-08-23 08:11 GMT
  • கல்வி, விளையாட்டில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
  • விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசும் போது,

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளிகளை தேடி வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களின் படிப்பிற்கும் மற்றும் உடற்பயிற்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. எனவே மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என ேபசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்ய நாதன் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கும் அனைத்து நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதனடிப்படையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதன்படி இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,430 மாணவர்களுக்கும், 9,324 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. வை.முத்துராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சு மிதமிழ்செல்வன், புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் திலகவதிசெந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News