உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் இளம்பெண் தற்கொலை - பொய் வழக்கு போட்டு போலீசார் மிரட்டுவதாக கடிதம்

Published On 2022-10-01 09:55 GMT   |   Update On 2022-10-01 09:55 GMT
  • ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா (வயது 35).
  • கையெழுத்திட செல்லும் போதெல்லாம் தன்னையும், குடும்பத்தினரை–யும் கீரமங்கலம் போலீசார் மிரட்டி வருவதாக கோகிலா புகார் தெரிவித்தார்.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா (வயது 35). நடைபாதை பிரச்சினை தொடர்பாக கீரமங்கலம் போலீசாரால் கடந்த 20-ந்தேதி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அவ்வாறு கையெழுத்திட செல்லும் போதெல்லாம் தன்னையும், குடும்பத்தினரையும் கீரமங்கலம் போலீசார் மிரட்டி வருவதாக கோகிலா புகார் தெரிவித்தார்.

இதனால் தனது நிம்மதியை இழந்து விட்டதாக கூறியதோடு, இந்த பிரச்சினையில் தனது கணவரையும் இணைத்து விட்டதால் அவர் பயந்துபோய் எங்கு போனார் என்றே தெரியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கோகிலாவின் உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்குரிய நடை பாதையை சீர் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News