டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு சிவந்தி கோப்பைக்கான வினாடி-வினா போட்டி
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான 20-வது ஆண்டு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.
- உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சிவந்தி கோப்பையை வென்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயின்றோர் கழகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான 20-வது ஆண்டு மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது.
கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பத்துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ரா தேவி வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.
பெங்களூரு ஈக்கோ வேர்ல்ட் டெக் சிஸ்டம்ஸ் குளோபல் சர்வீஸ் நிறுவன மூத்த மேலாளர் குமரன் ராமஜெயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கற்றல் ஒரு தொடர்ச்சியான செயல்முறை, மாணவர்கள் தங்களது திறன்கள் மற்றும் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.
இதில் 25 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முதலில் பொது அறிவு, நாட்டு நடப்பு, தொழில்நுட்பம், அடிப்படை அறிவியல் ஆகியவற்றில் இருந்து மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட 6 அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.
சர்வதேச மனிதவள மற்றும் வினாடி-வினா போட்டி நிபுணர் ஜஸ்டின் ஆண்டனி இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை நடத்தினார். இதில் உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது பவாஸ், பொன் காயத்ரி முதலிடம் பிடித்து சிவந்தி கோப்பையை வென்றனர்.
கன்னியாகுமரி எஸ்.ஆர்.கே.பி.வி. மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் அஸ்வந்த், அகிேலஷ் கோவர்தன் 2-வது இடமும், சாகுபுரம் கமலாவதி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீராம், அப்துல் ஹரீத் 3-வது இடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாண வர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதிச்சுற்றில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த உடன்குடி சல்மா பள்ளி மாணவர்களுக்கு சிவந்தி சுழல் கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படும்.