ஸ்ரீநிவாசபெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா
- ஸ்ரீநிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் எழுந்தருளினார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற தென் திருப்பதி வேங்கடாஜலபதி ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் உள்ளது. புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீநிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் எழுந்தருளினார். பின்ன சுவாமி வீதியுலாவாக வருகை தந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
பின்னர் பல்லவராயன் பேட்டையில் உள்ள குளத்தில் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீநிவாச பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து மூன்று முறை தெப்பம் வலம் வந்தன. பட்டர் சுவாமிகள் தீப ஆராதனை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதில் விழா குழு வினர்கள் சந்தா னகிருஷ்ணன் , மகாதேவன், ரெங்கநாதன், லெட்சுமி நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளனர்.