உள்ளூர் செய்திகள்

கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மீது தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

நாகையில் இன்று மழை; நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணி தீவிரம்

Published On 2023-02-28 08:10 GMT   |   Update On 2023-02-28 08:10 GMT
  • அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
  • கொள்முதல் நேரத்தில் பெய்யும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நாகப்பட்டினம்:

டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

தற்போது கொள்முதல் நேரத்தில் பெய்யும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மழையால் வலிவலம், திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அது தவிர ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தைத்து அவற்றை பாதுகாப்பாக அடுக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 172 நேரடி அரசு கொள்முதல் நிலையங்களில் சுமார் 75-க்கும் மேற்பட்ட திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையங்களாக செயல்படுவதாகவும் அதை நிரந்தர கட்டிடமாக கட்டி தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News