உள்ளூர் செய்திகள்

ஆத்துபாலத்திற்கு கீழ் செல்லும் சாலையில் மழைநீர் வடிகாலை சரிசெய்ய வேண்டும்

Published On 2023-09-22 09:27 GMT   |   Update On 2023-09-22 09:27 GMT
  • கலெக்டரிடம் செ.தாமோதரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
  • கீரணத்தம் பகுதியில் வீடு கட்டி தரவும் கலெக்டரிடம் வலியுறுத்தல்

கோவை,

கோவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காயிதேமில்லத் காலனியில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை அரசு பதிவேட்டில் பதிவாகவில்லை. எனவே அந்த பட்டாக்களை உடனடியாக பதிவேட்டில் இடம்பெற செய்யவேண்டும்.

ஆத்துப்பாலத்திற்கு கீழ் செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க் கால் அமைக்கப்படுகிறது. அவை ஒரு சில இடங்களில் தாழ்வாகவும், உயரமாகவும் உள்ளது. இதனால் காயிதே மில்லத் காலனியில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் வெளியில் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும்.

மேலும் காயிதேமில்லத் காலனிக்குள் செல்வதற்கான சரிவுதளத்தை சரியாக அமைக்க வேண்டும். மேம்பாலத்தில் இருந்து காயிதேமில்லத் காலனிக்கு இறங்குதளம் நேரடியாக வருவதால், அங்கு வசிக்கு மக்கள் அடுத்த சாலைக்கு செல்ல, சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றிவர வேண்டி உள்ளது.

இதனால் அவசர காலத்தில் கோவைக்கு செல்ல மிகவும் சிரமம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இறங்கும் தளத்தில் கீழ்ப்பாதை அமைத்து, அந்த வழியாக ஆம்புலன்ஸ், பள்ளிகுழந் தைகள் அடுத்த சாலைக்கு செல்வதற்கு பாதை அமைத்து கொடுக்க வேண்டும்.

கோவை மாநகராட்சி 99-வது வார்டு, சித்தன்னபு ரம் பகுதியில் உள்ள வெள்ளலூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் இடிக்கப்ப ட்டன. எனவே அவர்கள் வீடுஇன்றி சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து ஏற்கெனவே கோரிக்கை மனு தரப்பட்டு உள்ளது. அப்போது கீரணத்தம் பகுதியில் வீடு கட்டி தருவதாக கலெக்டர் கூறியிருந்தார்.

ஆனால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு உடனடியாக மாற்றுவீடு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அப்போது எச்.எஸ்.ஹீலர், கோவை ஜலீம், எம்.எச்.அப்பாஸ், அக்பர்கான், இப்ராஹிம், குட்டி, கோட்டைசேட், முஹம்மது, காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News