உள்ளூர் செய்திகள்

திருப்பாலைக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.

பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

Published On 2022-07-06 07:59 GMT   |   Update On 2022-07-06 07:59 GMT
  • ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது.
  • ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.மங்கலம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் முகமது உமர்பாரூக் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு யூனியன் ஆணையாளர் முத்துக்கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி மலைராஜ் முன்னிலை வகித்தனர்.

இதில் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். யூனியன் தலைவர் ராதிகா பிரபு திருப்பாலைக்குடியில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள், கறிக்கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் இலைகளை கைப்பற்றினர். மீண்டும் பயன்படுத்தினால் சட்டநடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளர்களிடம் கூறினார்.

ஊர்வலத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் (தூய்மை பாரத இயக்கம்) ஆறுமுகம் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆனந்தூர் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் துரத்தி நிஷா தலைமையிலும், சாத்தனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சுமன் தலைமையிலும் பிளா ஸ்டிக் ஒழிப்பு பேரணி நடந்தது. இதில் ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News