உள்ளூர் செய்திகள்

பெங்களுர்-ராமேசுவரம் ெரயில் பரமக்குடி, மானாமதுரையில் நின்று செல்ல கோரிக்கை

Published On 2023-06-30 06:48 GMT   |   Update On 2023-06-30 06:48 GMT
  • பெங்களுர்-ராமேசுவரம் ெரயில் பரமக்குடி, மானாமதுரையில் நின்று செல்ல வேண்டும்.
  • ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள ஏராளமானோர் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.ராமேசுவரம் முதல் ஹூப்ளி வரை இயக்கப்படும் வாராந்திர ெரயில் (ெரயில் எண்.07355) தமிழ்நாடு வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக சென்று இறுதியாக ஹூப்ளி ெரயில் நிலையத்தை அடைகிறது.

அவ்வாறு செல்லும் போது பெங்களூரில் உள்ள கார்மேலராம் மற்றும் தமிழ கத்தில் பரமக்குடி, சிவகங்கை ஆகிய ெரயில் நிலை யங்களின் நிறுத்தங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால் அங்கு பணிபுரியும் தென் மாவட்ட பயணிகள் மிருந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஓசூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்வதால் அங்கிருந்து கார்மேலராம், கண்டோன்மென்ட், மெஜஸ்டிக் செல்லும் பயணிகள், ெரயில்கள் இல்லாததால் பெங்களூர் பனஸ்வாடி, எஸ்வந்த்பூர் ெரயில் நிலையங்களுக்கு சென்று அதன்பிறகு கார்மேலராம், கண்டோன்மென்ட், மெஜஸ்டிக் ெரயில் நிலையங்களுக்கு வர வேண்டி உள்ளது. இதன் காணமாகவும், பயணிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள்.

பனாஸ்வாடி, எஸ்வந்த் பூர் ெரயில் நிலையங்களில் இருந்து மெஜஸ்டிக், கண்டோன்மென்ட், கார்மேலராம் 3 ெரயில் நிலையம் செல்வதற்கு பயணிகள் ெரயில் சரியான நேரத்திற்கு இல்லை.

ஓசூரில் இருந்து காலை 9 மற்றும்9½ மணி அளவில் 16212/06592 வண்டிகள் கார்மேலராம் வழியாக பனாஸ்வாடி, எஸ்வந்த்பூர் செல்கின்றன. ஆனால் ஹூப்ளி வாராந்திர ெரயில் ஓசூர் வரும்போது காலை 9 மணி அளவில் வருவதால் பயணிகள் ெரயிலை ஓசூரில் இறங்கி கன்டோன்மென்ட், கார்மலெராம், மெஜஸ்டிக் செல்லும் பயணிகள் பயணிகள் ெரயிலை பிடிக்க முடியவில்லை.

அதேபோல் ஹுப்ளியில் இருந்து ராமேசுவரம் வரும்போது மெஜஸ்டிக், கண்டோன்மென்ட், கார்மேலராம் பகுதி மக்கள் வாராந்திர ெரயிலை பிடிக்க எஸ்வந்த்பூர், பனாஸ்வாடி ெரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது.

சரியான நேரத்திற்கு இந்த ெரயில் நிலையங்களில் இருந்து பயணிகள் ெரயில் குறித்த நேரத்தில் இல்லை. கார்மேலராம் ெரயில் நிலையத்திலிருந்து காலை 9 மணி அளவில் எஸ்வந்த்பூர் ெரயில் நிலையத்திற்கு சென்று ராமேசுவரம்- ஹூப்ளி வாராந்திர ெரயிலை பிடிக்க 3 மணி நேரம் எஸ்வந்த்பூர் ெரயில் நிலையத்தில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.

ஆதலால் மெஜஸ்டிக் மற்றும் கண்டோன்மென்ட், கார்மேலராம் ெரயில் பயணிகளுக்காக ராமேசுவரம்-ஹூப்ளி ெரயிலை கார்மேலராம் ெரயில் நிலையத்தில் நிறுத்தி சென்றால் தமிழ்நாடு மற்றும் பெங்களூர் பயணிகள் பயனடைவார்கள். ெரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பயணிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News