- ம.தி.மு.க.சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
- அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம்
ம.தி.மு.க. 30-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடியேற்று விழா மற்றும் ரத்ததான முகாம் முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் தலைமையில் நடந்தது. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், பரமக்குடி நகரசபை துணைத் தலைவருமான குணா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
முன்னதாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை, ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் ஏற்பாட்டிலும், கேணிக்கரை பகுதியில் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி ஏற்பாட்டிலும், பரமக்குடி நகர் பகுதியிலும் மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் இளையராஜா முன்னிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் செய்திருந்தார்.