உள்ளூர் செய்திகள்

புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பாளர் லட்சுமணனுக்கு, மாவட்ட தலைவர் சந்தான தாஸ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பா.ம.க அவசர ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-18 07:01 GMT   |   Update On 2023-10-18 07:01 GMT
  • பா.ம.க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு சந்தான தாஸ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் அமைக்க வேண்டும், கிளைகள் அனைத்திலும் கொடி ஏற்ற வேண்டும், இளைஞர் சங்கங்களை பலப்படுத்த வேண்டும், ராமநாதபுரம் மாவட்டம் வைகை நீர் ஒப்பந்தத்தின்படி 12-ல் 7 பங்கு நீரை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட் டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப் பட்டது.

பசுமை தாயகத்தின் மாநில துணைச் செயலாளர் கர்ண மகா ராஜா, மாவட்ட துணை செயலாளர் ராசிக், ராமநாத புரம் நகர செயலாளர் பாலா, மண்ட பம் ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் லட்சு மணன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கார்த்திக், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க அமைப் பாளர் ராம் நகர் லட்சுமணன் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம்,

சிறுபான்மை பிரிவு செயலாளர் வாப் பாசா, மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்க அமைப் பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலாளர் இரு ளாண்டி, கடலாடி ஒன்றிய துணை செயலாளர் முனிய சாமி, மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் சாகுல், மண்டபம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முனியசாமி, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் முகமது ஷரீப் நன்றி கூறி னார். புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பா ளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Tags:    

Similar News