உள்ளூர் செய்திகள்

மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது.

கடலில் படகுகளை நிறுத்த வசதி வேண்டும்

Published On 2022-06-09 10:00 GMT   |   Update On 2022-06-09 10:00 GMT
  • கடலில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்த வசதி செய்து தர வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.
  • ரூ.80 லட்சம் மதிப்பில் 32 படகுகள் வாங்கி உள்ளோம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:-

போஸ் ( அனைத்து விசை படகுகள் சங்க தலைவர்):- ரூ.8 லட்சம் சொந்த பணம் செலுத்தி மத்திய-மாநில அரசுகளின் மானியத்துடன் ரூ.80 லட்சம் மதிப்பில் 32 படகுகள் வாங்கி உள்ளோம். அவற்றை நிறுத்த துறைமுகம் இல்லை. பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் படகுகளுக்கு பாதுகாப்பு இல்லை.

இதனால் ஆழ்கடல் படகு வாங்க விண்ணப்பித்த பலர் வேண்டாம் என எழுதி கொடுத்துள்ளனர். ஆழ்கடல் படகுக்குரிய வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். முதலீட்டை திரும்ப தரவேண்டும்.

கருணாமூர்த்தி (கடல் தொழிலாளர் சங்கம்):- கடல்பாசி சேகரிக்கும் செல்லும் பெண்களுக்கு வனத்துறையினர் பாது காப்பு என்ற பெயரில் நெருக்கடி தருகின்றனர்.

27 தீவுகளில் கடல்பாசி எடுக்க உரிமம் வழங்க வேண்டும். நல்ல தண்ணி தீவு கோவில்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். விசைப்படகினர் ஆழ்கடலில் மீன் பிடிக்காமல் கரையோரங்களில் மீன்பிடிப்பதால் நாட்டு படகு மீனவர்கள் பாதிக்கப்ப டுகின்றனர். இதனால் 130 கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தேவதாஸ் (மீனவர் விசைப்படகு சங்க செய லாளர், ராமேசுவரம்):- உயிரை பணயம் வைத்து மீன்பிடிக்கிறோம். அதற்கு ரிய விலை கிடைக்கவில்லை. 800 விசைப்படகுகள், 3000 நாட்டுப்படகுகள் உள்ளன. 1500 லிட்டர் டீசல் மானியம் போதுமானதாக இல்லை, அதை உயர்த்த வேண்டும். சேமிப்பு நிவாரணத்துடன் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ரெஜிஸ் (தங்கச்சி மடம்):-ஆழ்கடல் படகை ரூ.80 லட்சம் கொடுத்து வாங்கவும், பயன்படுத்தவும் ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளோம். படகுகளை நிறுத்த முடியவில்லை. தூண்டில் வலை இல்லை. கேரளா, நாகர்கோவில் பகுதிகளில் நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். இதைத்தொ டர்ந்து சில மீனவர்கள் எலி மருந்தை சாப்பிட்டு சாகப்போகிறோம் என்று தெரிவித்து எலி 'பேஸ்ட்' பாக்கெட்டை காண்பித்தனர்.

உடனே உதவி இயக்குனர் கோபிநாத், விரைந்து சென்று அவர்களிடமிருந்து அதனை பறித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

மேலும் மீனவர்கள் பேசும்போது, மூக்கையூர் துறைமுகத்தில் டீசல் பம்ப் நிலையம் திறக்க வேண்டும். மடிவேலை பார்க்கும் மையம் இல்லாததால் தூத்துக்குடி செல்ல வேண்டியுள்ளது. பெண்களின் பாதுகாப்பி ற்காக மூக்கையூர் கடற்கரை பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்க வேண்டும். மீனவர்களின் குழந்தைகளுக்குரிய கல்வி உதவி தொகை தரவில்லை. பாசி எடுக்க செல்லும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றனர்.

மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் பேசும்போது, மீனவர்கள் தெரிவித்த குறை கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

கூட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், சிவராமசந்திரன், அப்துல் கலாம் ஜெயிலானி, மரைன் கூடுதல் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உள்பட மீன்வளத்துறை அதிகாரி கள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News