உள்ளூர் செய்திகள் (District)

கிராம மக்களின் வாழ்வாதார தேவைகளை அறிய நடந்த முகாமில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட காட்சி. 

வாழ்வாதார தேவைகளை அறிய கல்லூரி மாணவிகள் முகாம்

Published On 2022-08-12 09:00 GMT   |   Update On 2022-08-12 09:00 GMT
  • வாழ்வாதார தேவைகளை அறிய கல்லூரி மாணவிகள் முகாம் நடைபெற்றது.
  • ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் இந்த ஆய்வு தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது.

கமுதி

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் உன்னத இந்தியா திட்டம் (உன்னத் பாரத் அபியான்) ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் மதுரை, பரவை பகுதியில் உள்ள மங்கைய ர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், அந்தப்பகுதியில் உள்ள கிராமங்களான குட்லாடம்பட்டி, செம்மினி ப்பட்டி, கச்சைகட்டி, ராமை யன்பட்டி, பூச்சம்பட்டி ஆகிய 5 கிராமங்களைத் தத்தெடுத்து கிராமங்களில் எரிசக்தி, சாலை வசதி, விவசாய வளர்ச்சி, குடிநீர், சுகாதாரம், கல்விக்கூட வசதி மற்றும் கிராம பஞ்சாயத்துக்களில் தொழில் நுட்ப வசதி முதலான தகவல்களை சேகரித்து கிராம மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஆய்வு செய்தனர்.

இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெஸ்டினா, ஜெயக்குமாரி, சரண்யா, உறுப்பினர்கள் சாந்தி, உமாமகேஸ்வரி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் இந்த ஆய்வு தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. மதுரை பரவை மங்கையர்க்கரசி கலைக்கல்லூரி மாணவிகள் கிராமப்புற மக்களின் வாழ்வாதார தேவைகளை அறிய இந்த முகாமை நடத்தினர்.

Tags:    

Similar News