உள்ளூர் செய்திகள் (District)

ராமநாதபுரத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

Published On 2023-08-24 08:03 GMT   |   Update On 2023-08-24 08:03 GMT
  • சந்திராயன் திட்டம் வெற்றியடைந்ததையொட்டி ராமநாதபுரத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாடினர்.
  • மாணவர்கள் தொலை நோக்கி கருவி மூலம் சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை யிறங்கும் காட்சியை கண்டு களித்தனர்.

ராமநாதபுரம்

சந்திராயன் 3 தரை யிறங்கும் காட்சிகளை தொலைநோக்கி மூலம் காணும் வசதியை ராமநாதபுரம் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அஸ்ட்ரோ கிளப் சார்பில் நடந்த இந்த நிகழ்விற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், மல்லிகா முன்னிலை வகித்தனர்.

தலைமையாசிரியை ஜெயந்தி வரவேற்றார். அஸ்ட்ரோ கிளப் சொக்க நாதன் தொலை நோக்கி கருவி மூலம் மாண வர்களுக்கு சந்திராயன்- -3 விண்கலத்தை காட்டினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ராமநாதன், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஏராளமான மாணவர்கள தொலை நோக்கி கருவி மூலம் சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரை யிறங்கும் காட்சியை கண்டு களித்தனர். இஸ்ரோவால் சந்திராயன் தரையிறங்கும் காட்சியை மாணவர்களுக்கு பெரிய திரையில் ஒளிபரப்பு செய்தனர். இதை மாண வர்கள் கண்டு மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

சந்திராயன் வெற்றியை தொடர்ந்து ராமநாதபுரம் அரண் மனை பகுதியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதேபோல் ஏராளமான பள்ளிகளில் மாணவ மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

Tags:    

Similar News