மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியாக மாற்ற வேண்டும்
- மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியாக மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- துணைத்தலைவா் முருகன் நன்றி கூறினாா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவா் முருகன் தலைமையில் ராம நாதபுரத்தில் நடைபெற்றது. மாநில தலைவா் தமிழரசு, பொதுச்செயலாளா் சா்வே சன் முன்னிலை வகித்தனா்.
ராமநாதபுரம் மாவட்ட இளைஞா்கள் பயன் பெறும் வகையில் கூட்டுறவு பட்டய பயிற்சி மையம் அமைக்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து "தமிழ்நாடு வங்கி"யாக உருவாக்கிட வேண்டும். 128 நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட பொதுச்செயலாளா் சுப்பிரமணியன், இணைச் செயலாளா் ரமேஷ் மற்றும் திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். முடிவில் துணைத்தலைவா் முருகன் நன்றி கூறினாா்.