- ராமநாதபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் கிரேடு யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஊரக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முகமது ஆஷாத், மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த 4.10.2023-ல் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 15-வது குழும கூட்டத்தின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.
கடந்த 2010 முதல் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 8-வது கல்வி தகுதி பெற்றவர்களை பணியில் தேர்வு செய்தனர்.அவர்களை அதே தகுதியில் பணியில் நீடிக்க செய்ய வேண்டும் என்றும் புதிதாக எடுப்பவர்களை 12-வது கல்வி தகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊரக சமூக களப் பயிற்றுனர்க ளுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.