- தொண்டியில் அரசு பள்ளியில் உணவுத்திருவிழா நடந்தது.
- நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர்.
தொண்டி
தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தெற்கு தெரு ஜமாத்தார்கள், நண்பர்கள் அறக்கட்டளை, தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரிய பயிற்றுனர் தனலெட்சுமி, சுரேஷ்குமார் உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் துரித உணவுகளின் தீமைகள், கலப்படமற்ற பாரம்பரிய இயற்கை உணவின் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும் வகையில் பெற்றோர்கள் தானியங்களில் உணவுகளை தயார் செய்து கொண்டு வந்தனர். சிறந்த இயற்கை உணவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.