- தொண்டி அருகே மாணவ-மாணவிகளுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேல்டு விசன் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் மற்றும் ஊழியர்கள் செய்தி ருந்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வட்டாணம் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சத்யநாராயணன் தலைமையில் நடந்தது.
மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தேன்மொழி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு பூமிநாதன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அஷ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாணம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுந்தாஹினி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நோய்கள் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு மாணவ- மாணவிகளுக்கும் தலா 10 முகக்கவசம், 200 மில்லி சானிட்டைசர் இலவசமாக வேல்டு விசன் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேல்டு விசன் தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.