உள்ளூர் செய்திகள்
குறைந்த பட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
- குறைந்த பட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மூலம் 1000 டன் அரவைக் கொப்பரை ஆதார விலை திட்டத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிலோவிற்கு ரூ.105 என்ற விலையில் இதுவரை 6500 கிலோ தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்து ரூ.6 லட்சத்து 88 ஆயிரத்து 350 விற்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கொப்பரை கொள்முதல் பணி ஜூலை 31-ந்தேதி முடிய உள்ளது. தென்னை விவசாயிகள் கொப்பரைகளை கொண்டு வந்து குறைந்த பட்ச ஆதார விலையில் விற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு 96778 44623 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.