உள்ளூர் செய்திகள்

வீடுகளில் பச்சைக்கிளி வளர்க்க தடை

Published On 2023-08-23 07:15 GMT   |   Update On 2023-08-23 07:15 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் பச்சைக்கிளி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கிளிகள் மற்றும் பிற உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவவுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

பச்சை கிளி, மைனா, பஞ்சவர்ண புறா போன்ற உயிரினங்களை வீட்டில் வளர்க்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. அதனை வளர்த்தால் உடனடியாக வன அலுவலகங்களில் ஒப் படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரி வித்து உள்ளது.

வன உயிரினப்பா துகாப்பு சட்டம் 1972-ன் படி பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்ச வர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, கவுதாரி, பனங் காடை போன்ற வன உயிரினங்கள் வளர்ப்பது சட்டப் படி குற்றமாகும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கக்கூடிய வன உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சர்ச், பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.

எனவே வளர்ப்பில் உள்ள கிளிகள் மற்றும் பிற உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். வனப் பணியாளர்கள் ரோந்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை வளர்த்தவர்களுக்கு ரூ.25ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும், என்று ராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News