உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த மாதம் தொடக்கம்

Published On 2023-04-23 09:06 GMT   |   Update On 2023-04-23 09:06 GMT
  • ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.
  • 2 இடங்களில் தற்காலிக நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, கும்பகோணம், புதுக்கோட்டை,திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்ட ங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப் படுகிறது. இங்கு 6ஆயிரம் பேருக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

பஸ் நிலைய வளாகத்தில் பஸ் நிறுத்தும் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். பஸ் நுழைவு, வெளியேறும் பகுதியில் ஆபத்தான முறையில் காய்கறி, பழங்கள் விற்கின்றனர். பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது.

இதையடுத்து ரூ.45 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையத்தை சீரமைக்கவும் சந்தை திடல் வரை விரிவு படுத்தவும் நகராட்சி திட்டமிட்டது.இதற்காக நகராட்சி நிர்வாகத்துறை முதற்கட்டமாக ரூ.20 கோடியில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளது.அடுத்த மாதம் விரிவாக்க பணிகளை தொடங்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிய பஸ் நிலையம் தற்போ தைய வாகன நிறுத்துமிடம் வரை வணிக வளாகத்துடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த பணிகள் முதற்கட்டமாக ரூ.20 கோடியில் தொடங்க உள்ளது. தொடர்ந்து கூடுதல் நிதியை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறோம்.

விரிவாக்க பணிக்காக மகர் நோன்பு பொட்டல் வரை பஸ் நிலையம் வர உள்ளதாக தவறான தகவல்களை கூறுகின்றனர். அவ்வாறு இல்லை. பழைய பஸ் நிலைய பகுதி, ராம நாதபுரம்-மதுரை ரோடு பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய காலியிடம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர், நகராட்சி மண்டல இயக்குநரிடம் அனுமதி கேட்டுள் ளோம்.

அனுமதி வந்தபின் போக்குவரத்து அதிகாரிகள் போலீசாருடன் ஆலோசனை நடத்தி பஸ்கள் நிறுத்தப்படும். வழித்தடங்கள் மற்றும் பஸ் நிலைய இடமாற்றம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News