உள்ளூர் செய்திகள்

வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கான பயிற்சி

Published On 2023-05-10 07:45 GMT   |   Update On 2023-05-10 07:45 GMT
  • வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
  • இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.

ராமநாதபுரம்

வேளாண் விரிவாக்க பணியாளர்களுக்கு காலநிலை மாற்றத்திற்கேற்ற சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களை சேகரிப்பது மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான பயிற்சி ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி தலைமை தாங்கினார். காலநிலை மாற்றங்களை எவ்வாறு கணிப்பது? காலநிலை மாற்றங்களை விவசாயிகளுக்கு முன்னறிவிப்பாக அளிக்கும் சேவை,காலநிலை மாற்றங்களால் வேளாண்மையில் ஏற்படக்கூடிய மாறுதல்கள், வேளாண் உற்பத்தியின் பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாத்து கூடுதல் உற்பத்தி பெறுவதற்கான தொழில்நுட்பங்களாகிய எந்திர விதை விதைப்பு,நேரடி நடவு முறை, எந்திர நடவு முறை, நெல்லில் ஊடுபயிர், நெல்லில் சொட்டுநீர் பாசன முறை, கூடுதல் விதைப்பு விதைத்த வயலில் களை எடுக்கும் கருவி மூலம் சரியான பயிர் எண்ணிக்கை பராமரித்தல்,நெல் தரிசில் உளுந்து சாகுபடி மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், மாவட்ட வேளாண் வானிலைப்பிரிவு விஞ்ஞானி வெங்கடேசுவரி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்க ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News