உள்ளூர் செய்திகள்

காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

கிராமசபை கூட்டம்

Published On 2022-10-03 07:35 GMT   |   Update On 2022-10-03 07:35 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
  • இதில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடி ஊராட்சி வளாகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் லட்சுமிபுரம் சமுதாய கூடத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக திருப்புல்லாணி ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊராட்சி துணைத்த லைவர் பரீக்கா, ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்த மூர்த்தி, பற்றாளர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட 2022-23-ம் ஆண்டு வரவு-செலவு கணக்கு பிளக்ஸ் போர்டு மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.

கோகுல் நகரில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். காஞ்சிரங்குடி ஊராட்சி க்கு உட்பட்ட தனியார் ஆக்கிரமிப்பு செய்த அரசு நிலத்தை மீட்க வேண்டும். ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

ராமநாதபுரம் கீழக்கரை வழித்தடத்தில் லட்சுமிபுரம் வழியாக இயக்கப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதில் வட்ட வழங்கல் அலுவலர் பரமசிவம், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சின்னப்பன் (சைல்டு லைன்) சகாயராணி (கல்வித்துறை) உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற செயலர் அமுதா சத்தியேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் ஊராட்சி வளாகத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையிலும், ஒன்றிய குழு உறுப்பினர் பைரோஸ்கான், பற்றாளர் அருண் பிரசாத் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் வேளா ண்மை துறை உதவி இயக்குனர் அகர்லால், கிராம நிர்வாக அலுவலர் அங்கையற்கண்ணன், கொத்தாலிங்கம் (மீன்வளத்துறை), குழந்தை வேலு (மின்சாரத்துறை) சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, கலை முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்ற துணை தலைவர் புரோஸ் கான் நன்றி கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் கலா முத்தழகு தலைமை தாங்கினார். இதில் பஞ்சாயத்து யூனியன் சார்பில் மாரியம்மாள் பார்வையாளராக கலந்துகொண்டார். கிராம சபைக்கான கோரம் இல்லாதால் கூட்டம் நடைபெறவில்லை.

இது குறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த இந்து மக்கள் நல இயக்க மாநில தலைவர் இளையராஜா கூறும்போது, ஊராட்சிகள் சட்டத்தின்படி கிராம மக்கள் தொகை 501 முதல் 3000 பேர் உள்ள கிராமத்தில் 100 பேர் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இக்கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது.ஆனால் 40-க்கும் குறைவாகவே பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த கிராம சபை கூட்டத்தில் வாரம் ஒரு முறை கொசு மருந்து தெளிக்க வேண்டும். கிராம கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும். தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதில் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறினார்.

Tags:    

Similar News