உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசினார். அருகில் முருகேசன் எம்.எல்.ஏ. உள்ளார்.

கிராம சபை கூட்டம்

Published On 2022-10-05 08:54 GMT   |   Update On 2022-10-05 08:54 GMT
  • பரமக்குடி அருகே கிராம சபை கூட்டம் நடந்தது.
  • ஊராட்சியின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் வலியுறுத்தினார்.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், நெல்மடூர் ஊராட்சி நல்லூர் கிராமத்தில் காந்தியடிகளின் 154-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் வரவேற்றார்.

இதில் கலெக்டர் பேசுகையில், ஊராட்சியின் வளர்ச்சிக்கு கிராம சபை என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தேவையான புதிய திட்டங்களை பெறுவதற்கு கிராம சபையின் ஒப்புதல் முக்கியமான ஒன்றாகும். பொதுமக்களின் கோரி க்கைகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைத்த நல்லூர் கிராம பாசன கண்மாய் தூர்வாரும் பணி மற்றும் மடை கட்டும் பணியை வரும் நிதியாண்டில் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்தப்படும்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர், பேவர் பிளாக் தளம் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டித்தருவதாக தெரிவித்துள்ளார்.

அதே போல் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளதை வட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நெல்மடூர் ஊராட்சி பகுதியில் பிற ஊராட்சிகளை சேர்ந்த குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடுகள் விளைவதாக தெரிவித்துள்ளதையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தொடர்புடைய ஊராட்சி களை அழைத்துப் பேசி வருங்காலங்களில் அந்தந்த ஊராட்சி குப்பைகளை அங்கேயே அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், வட்டாட்சியர் தமீம் ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News