- நாம் தமிழர் கட்சி ஆா்ப்பாட்டம் நடந்தது.
- கபடி போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது கபடிப் போட்டிகள் கிராமங்களில் நடத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் கபடி போட்டியின் போது சில ஊா்களில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக கபடிப்போட்டிகள் நடத்த போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். போட்டி நடத்தத் தடையும் விதித்துள்ளது.
போலீசார் நடவடிக்கையால் கபடிப் போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, தடையை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்குளம் ராஜு தலைமை வகித்தார். பாராளுமன்ற தொகுதி செயலாளர் குமரன், மாவட்ட செயலா்கள் கண். இளங்கோ, காமராஜ், மாவட்டத் தலைவர் நாகூர் கனி, மாநில பேச்சாளர் வினோத் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கபடி போட்டிக்கான தடையை நீக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கபடிப் போட்டிக்கு அனுமதி கோரி தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.