பைரவருக்கு 1,000 கிலோ விபூதி அபிஷேகம்
- ஜெயந்தி விழா முன்னிட்டு ஏற்பாடு
- நாளை நாட்டிய மஹோத்சவம் நடக்கிறது
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாள்தோறும் யாகங்கள், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதர சுவாமிகளின் 63-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும் பல்வேறு சிறப்பு ஹோம பூஜைகள், அபிஷேக, ஆராத னைகளும், நாள்தோறும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 1000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய மஹோத்சவம் நிகழ்ச்சி நாளை காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது.
பரத நாட்டிய நிகழ்ச்சியை அலமேலு பாஸ்கரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர்.ஜோதிமணி, ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர். பாலாஜி நந்தகோபால், பெங்களூர் டாக்டர்.பரசுராமன், வக்கீல் மோகனமுரளி, சென்னை சந்திரசேகரசெட்டி, ஆடிட்டர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
வருகிற 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 64பைரவர் யாகமும், அஷ்ட கால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகமும் நடைபெறுகிறது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ராணிப்பேட்டை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெ.லட்சுமணன், துணை தலைவர் என்.பி.பழனி, நெமிலி கஜேந்திரன், பாக்கி யலட்சுமி, சென்னை டாக்டர்கள்.ரங்கராஜன், விஷ்வஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நாட்டிய மஹோத்சவம் மற்றும் பைரவர் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.