- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் மருதாலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு முட்டவாடி பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா, மகளிர் உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி, பருப்பு வழங்கினார். 6 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 லட்சத்து 85 ஆயிரம் கடன் உதவி வழங்கினார்.
அப்போது மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட விவசாய அணி வெங்கடேசன், தலைமை கழக பேச்சாளர் சீனிவாசன் மற்றும் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ரெண்டாடியிலும் புதிய பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜ், ஒன்றிய குழு துணை பூங்கொடி ஆனந்தன், முன்னிலை வகித்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா அனைவரையும் வரவேற்றார்.