உள்ளூர் செய்திகள் (District)

பொதுவிநியோக திட்ட குறைத்தீர்வு முகாம்

Published On 2023-11-19 08:40 GMT   |   Update On 2023-11-19 08:40 GMT
  • 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு
  • மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் நடக்கிறது

காவேரிப்பாக்கம்:

நெமிலி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு முகாமில் 38 மனுக்கள் பெறப்பட்டன.

மாதந்தோறும் 2-வது சனிக்கிழமைகளில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், பிழை திருத்தம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மனுக்கள் பெறப்படுகின்றன.

முகாம் வட்ட வழங்கல் அலுவலர் சத்யா தலைமை தாங்கி ரேஷன் அட்டையில் ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்ட 38 மனுக்களை பெற்றுக் கொண்டார். அதில் 36 மனுக்கள் தீர்வு காணப்பட்டு 2 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதில் தனி வருவாய் ஆய்வாளர் முருகன், வட்ட வழங்கல் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News