உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதி மீறிய வாகனங்கள் பறிமுதல்

Published On 2023-11-26 06:42 GMT   |   Update On 2023-11-26 06:42 GMT
  • ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 700 அபராதம் வசூல்
  • போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அரக்கோணம் கிளை அலுவலக ஆய்வாளர் செங்குட்டுவேல் ஆகியோர் ராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாஜா, ஆற்காடு ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில் 243 வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாதது, அனுமதி சீட்டு இல்லாதது, வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாதது, அதிக பாரம் ஏற்றி வந்தது என 25 வாகனங்கள் மீது ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராணிப்பேட்டை வட்டார போக்கு வரத்து அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் சாலை போக்குவரத்து விதியை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News